ஜாலான் பினாங், 22 டிசம்பர் (பெர்னாமா) -- வட்டார அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஆசியான் மேற்கொள்ள வேண்டும்.
கம்போடியா–தாய்லாந்து விவகாரத்தைத் தீர்ப்பதற்கான முயற்சிகள், பதற்றத்தைக் குறைப்பதோடு இல்லாமல், அதற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.
பரஸ்பர வேறுபாடுகள் இருந்தாலும் சம்பந்தப்பட்ட தரப்பினர்களிடையே நம்பிக்கையை வலுப்படுத்தி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பை ஏற்படுத்துவதும் அவசியமாகும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.
சவால்மிக்க காலக்கட்டங்களில் வட்டாரத்தை கையாள உதவிய அறிவு, ஒற்றுமை மற்றும் நம்பிக்கையின் வழி ஆசியானின் அணுகுமுறைகள் வழிநடத்தப்பட வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான் கூறினார்.
''வட்டார அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணுவதற்கு ஆசியான் தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும். பதற்றங்களை குறைப்பதோடு நமக்கு இன்னும் இலக்கு இருக்கிறது. முரண்பாடான தரப்பினரிடையே நம்பிக்கையை வளர்ப்பதை நாம் தீவிரப்படுத்த வேண்டும். வேறுபாடுகள் இருந்தாலும் உரையாடலுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். மோதல்களுக்கான பதில்கள் இன்னும் நம்மிடல் இல்லை. கடந்த காலம் நிறைய கற்றுத் தருகிறது'', என்று அவர் கூறினார்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் வெளியுறவு அமைச்சர்களுக்கான சிறப்பு கூட்டத்தில் ஆற்றிய சிறப்பு உரையில் கம்போடியா மற்றும் தாய்லாந்திற்கு இடையிலான தற்போதைய நிலவரம் குறித்து முஹமட் ஹசான் அவ்வாறு கருத்துரைத்தார்.
வெளியுறவு அமைச்சர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆசியான் பொதுச் செயலாளர் டாக்டர் காவ் கிம் ஹௌர்ன் உட்பட உறுப்பு நாடுகள் மற்றும் ஆசியான் செயலகத்தைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கம்போடிய துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான பிராக் சோகோன் மற்றும் தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் சிஹாசக் புவாங்கெட்கியோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)