பேங்காக், டிசம்பர் 17 (பெர்னாமா) -- 2025 தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டி.
இன்று நடைபெற்ற அம்பெய்தும் போட்டியில் தேசிய விளையாட்டாளர்கள் ஒரு வெள்ளி ஒரு வெண்கலம் வென்று புள்ளிப்பட்டியளில் பதக்கங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர்.
திறமையான ஆட்டத்தை வெளிபடுத்தினாலும் மகளிர் அணியில் இடம்பெற்றுள்ள அரியானா நூர் டானியா முஹமட் சைரி, Joey Xing Lei Tan மற்றும் கு நூர் அஃபிடா குரு சனி தங்கம் வெல்லும் இலக்கில் இந்தோனேசியாவிடம் தோல்வி கண்டனர்.
இந்தோனேசியாவின் டயானந்தா சோய்ருனிசா, ஆயு மாரெட்டா மற்றும் ரெசா ஆக்தாவியாவிடம் போட்டியிட்ட அவர்கள் 3-5 என்ற புள்ளிகளில் தங்கத்தை நழுவவிட்டனர்.
''வெள்ளிப் பதக்கம் எங்களுக்குச் சிறப்பு என்று நான் நினைக்கிறேன். நாங்கள் போதுமான அளவு விளையாடவில்லை தங்கத்தை வீட்டிற்குக் கொண்டு வர போதுமான அளவு தயாராகவில்லை என்று சிலர் கூறலாம். எனக்கு எனது புதிய அணியில் நான் மிகவும் திருப்தி அடைகிறேன். நாங்கள் மூவரும் சீ விளையாட்டில் முதல் முறையாகப் பங்கேற்றோம். எடுத்துக்காட்டாகச் சீ விளையாட்டுப் போட்டி ஒரு பதக்கத்தை மீண்டும் கொண்டு வர முடிந்தது. இது எல்லோராலும் செய்யக்கூடிய ஒன்றல்ல'', என்றார் அரியானா நூர் டானியா முஹமட் சைரி.
இதனிடையே ஆடவர் பிரிவில் நாட்டின் முஹமட் சரீஃப் சாஹிர் சுல்கெப்லி, முஹமட் ஹாஃபிக் புஸ்தமின், முஹமட் ஹைகால் டேனிஷ் ஷாம்சுல் அஃபாண்டி மற்றும் செர்ன் சின் குயிக் ஆகியோர் அடங்கிய குழு தாய்லாந்து அணியை 5-3 என்ற நிலையில் வென்று வெண்கலம் வென்றது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)