இங்கிலாந்து, 3 டிசம்பர் (பெர்னாமா) -- 2025 இளையோர் உலகக் கிண்ண ஹாக்கி போட்டியில், ஆடவர் அணி காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
தமிழ்நாட்டின், மதுரையில் உள்ள தேசிய ஹாக்கி அரங்கில் நேற்று நடைபெற்ற குழு பிரிவு ஆட்டத்தில் மலேசியா 1-3 என்று கோல்களில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி கண்டது.
ஆட்டம் தொடங்கிய நான்காவது நிமிடத்தில் முதல் கோல் அடித்த இங்கிலாந்து
அதன் மற்றொரு கோலை 36-வது நிமிடத்தில் போட்டது.
அந்த இடைவெளியை குறைக்க போராடிய மலேசியா, 47-வது நிமிடம் அசிமுடின் கமாருடின் மூலம் முதல் கோலை போட்டது.
ஆயினும், இரண்டாம் பாதி ஆட்டம் முடியும் தருணத்தில் மூன்றாம் கோலைப் போட்டு, ஈ பிரிவில் இங்கிலாந்து தனது வெற்றியை உறுதி செய்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)