கோலாலம்பூர், டிசம்பர் 02 (பெர்னாமா) -- சிப்பாங் அனைத்துலக கார் பந்தய தளத்தில் டிசம்பர் ஐந்து மற்றும் ஆறாம் தேதிகளில் நடைபெறவுள்ள 12 மணி நேர கார் பந்தயத்தில் கலந்து கொள்ள மலேசிய வந்துள்ளார் நடிகர் அஜித்குமார்.
நேற்று மலேசியா வந்த அவர் இன்று காலை பத்துமலை திருத்தலத்திற்கு வருகை புரிந்து தரிசனம் செய்தார்.
பத்துமலை திருத்தலத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான் ஸ்ரீ ஆர். நடராஜா மற்றும் அறங்காவலர் டத்தோ ந. சிவக்குமார் ஆகியோரை நடிகர் அஜித் சந்தித்துப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, மேற்குகைக்குச் சென்று முருகப் பெருமானை வழிபட்டார்.
அவரைக் காண்பதற்கு ரசிகர்கள் கூடினர்.
2007ஆம் ஆண்டு பில்லா படப்பிடிப்பிற்காக அஜித் பத்துமலைக்கு வருகைப் புரிந்திருந்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)