பெரு, 2 டிசம்பர் (பெர்னாமா) -- மத்திய பெரு, உசயாளியின் அமேசான் வனப்பகுதியில் உள்ள இபாரியா துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த இரு படகுகள் அங்கு நிகழ்ந்த திடீர் நிலச்சரிவில் மூழ்கியதால், அதிலிருந்த மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர்.
மேலும் பலரைக் காணவில்லை என்பதால் மரண எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
அப்படகுகளில் பயணித்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை.
ஒரு படகில் சுமார் 50 பயணிகள் இருந்திருக்கலாம் என்றும் மற்றொரு படகில் எவரும் இல்லை என்றும் அந்நாட்டின் அவசர் நடவடிக்கை மையம் தெரிவித்தது.
இந்நிலையில், காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கையை அடையாளம் காணும் வகையில் சம்பவ இடத்தில் கூடியிருக்கும் குடும்ப உறுப்பினர்களுடன் அமலாக்க அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)