Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

ஹட் யாயில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மலேசியர்களை மீட்கும் பணி நிறைவு

29/11/2025 05:13 PM

புத்ராஜெயா, நவம்பர் 29 (பெர்னாமா) -- தாய்லாந்தின் ஹட் யாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மலேசியர்களை வெளியேற்றும் நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக வெளியுறவு அமைச்சு சனிக்கிழமை உறுதிப்படுத்தியது.

பெரும் வெள்ளத்தால் சிக்கித் தவித்த மொத்தம் 6,222 மலேசியர்கள் வெற்றிகரமாகக் காப்பற்றப்பட்டனர்.

பேங்காக்கில் உள்ள மலேசிய தூதரகம் மற்றும் தன்னார்வக் குழுக்கள் உட்பட 15க்கும் மேற்பட்ட அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சிகள் வழி வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வெளியுறவு அமைச்சு இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அறிவித்துள்ளது.

வெள்ளத்தால் சிக்கித் தவித்த எஞ்சிய 12 மலேசியர்கள் நடவடிக்கையின் கடைசி நாளில் புக்கிட் காயு ஹித்தாம் எல்லை வழியாக வெற்றிகரமாக நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)