இந்தோனேசியா, நவம்பர் 26 (பெர்னாமா) -- இந்தோனேசியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் அறுவரை காணவில்லை என்று போலீஸ் தெரிவித்திருக்கிறது.
கடந்த வாரம் தொடங்கி பெய்து வரும் பருவமழையால், வட சுமத்ராவில் உள்ள பல ஆறுகள் கரை புரண்டு ஓடுகின்றன.
இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றடைவதில் மீட்புக் பணியாளர்கள் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
இன்று வரை, ஐந்து சடலங்கள் மீட்டுள்ளன.
சிபோல்கா, நகரில் காணாமல் போன நான்கு கிராமவாசிகளைத் தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்காலிக நிவாரண மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் ஆபத்தான பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியிருக்கின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)