Ad Banner
Ad Banner
 பொது

செப்புதே நிலச்சரிவு; நீர் தேக்கம் காரணமாக இருக்கலாம்

25/11/2025 06:20 PM

செப்புதே, நவம்பர் 25 (பெர்னாமா) -- கோலாலம்பூர், செப்புதேவில் உள்ள தாமான் யுனைடெட் அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்திற்குப் பழைய தடுப்புச் சுவர்கள் மற்றும் மண் அரிப்பை ஏற்படுத்தும் நிலத்தடியில் தண்ணீர் தேங்கியிருப்பது காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

இச்சம்பவத்தினால் சம்பந்தப்பட்ட அடுக்குமாடி கட்டிடத்தின் தடுப்புச் சுவர்கள் உடைந்ததுடன் இரண்டு வாகனங்கள் புதையுண்டதாகக் கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் துறை தகவல் வெளியிட்டுள்ளதாகச் செப்புதே நாடாளுமன்ற உறுப்பினர் திரெசா கோக் தெரிவித்தார்.

தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னதாக நிலச்சரிவு ஏற்பட்டதற்கான ஆரம்பக்கட்ட விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகக் கோக் கூறினார்.

மேலும், பாதுகாப்பு கருதி குடியிருப்பாளர்கள் அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று கோலாலம்பூர் மாநகராண்மை கழகம் டி.பி.கே.எல் வழங்கிய அறிவுறுத்தலை அனைவரும் பின்பற்றுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

''நேற்று டி.பி.கே.எல், எம்.பி.பி குடியிருப்பாளர்கள் பிரதிநிதி குழுவுடன் இணைந்து ஶ்ரீ பெட்டாலிங் சமூக மையத்தில் கூடாரங்கள் அமைப்பது, உணவு தயாரிப்பது போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து விட்டனர். எனவே, இம்முயற்சியைச் சிறப்பாக மேற்கொள்ள குடியிருப்பாளர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்'' என்றார் திரெசா கோக்.

இன்று நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அதனைத் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)