கேட்டலோனியா, ஜனவரி 21 (பெர்னாமா) -- பார்சிலோனாவின் பயணிகள் ரயில் ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்தார்.
மேலும், 37 பேர் காயத்திற்கு ஆளாகினர்.
அவர்களின் ஐவர் படுகாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ரயில் தண்டவாளத்தில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் இவ்விபத்து ஏற்பட்டதாக ஸ்பெயின் வட்டார அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்பெயினின் தெற்கு பகுதியில் குறைந்தது 42 பேர் உயிரிழந்த கோர விபத்து நிகழ்ந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, Catalonia வட்டாரத்தில் இவ்விபத்து நிகழ்ந்தது.
ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இவ்விபத்தில், அவசர பணியாளர்கள் இடிபாடுகளில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் தேடி வருகின்றனர்.
சம்பவ நடந்த இடத்திற்கு 20 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவசர சேவை பிரிவினர் தெரிவித்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)