Ad Banner
Ad Banner
 விளையாட்டு

சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கி போட்டியில் மலேசியா வெற்றி

25/11/2025 04:58 PM

ஈப்போ, 25 நவம்பர் (பெர்னாமா) --   2025 சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கி போட்டி.

நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் கனடாவுடன் மோதிய மலேசியா 3-2 என்ற கோல்களில் வெற்றி பெற்றது.

முன்னதாக, நியூசிலாந்துடனான ஆட்டத்தில் சமநிலை முடிவை எதிர்கொண்டுள்ள தேசிய அணிக்கு இந்த வெற்றி இன்னும் உத்வேகத்தை ஏற்படுத்தியது.

பேராக், ஈப்போவில் உள்ள சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி அரங்கில் இவ்வாட்டம் நடைபெற்றது.

ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் Speedy Tigers அணியைச் சேர்ந்த முஹமட் ஃபிட்ரி சாரி முதல் கோலை பெற்றுத் தந்தார்.

அதன் பின்னர், கனடா ஒரு கோல் போட ஆட்டம் 1-1-க்கு என சமநிலையை அடையச் செய்த வேளையில், அதன் மற்றுமொரு கோல் 17-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பின் வழி அடிக்கப்பட்டது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் தனது ஆட்டத்திறனை அதிகரித்த மலேசிய தொடர்ந்து இரு கோல்கள் போட்டு ஆட்டத்தை 3-2 என்ற நிலையில் முடித்தது. 

நாளை நடைபெறவிருக்கும் ஆட்டத்தில் மலேசியா இந்தியாவை எதிர்கொள்கிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)