கோலாலம்பூர், 25 நவம்பர் (பெர்னாமா) -- நாடு முழுவதும் உள்ள தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களில், நேற்று வரை 629 பேரை சுகாதாரப் பணியாளர்கள் பரிசோதித்தனர்.
பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 78 பேருக்கு கடுமையான சுவாச தொற்று, 16 பேருக்கு தோல் தொற்று, இருவருக்கு கடுமையான இரைப்பை குடல் அழற்சி, ஏ.ஜி.ஈ மற்றும் ஒருவருக்கு வெண்படல அழற்சி ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.
இதுவரை எந்தவொரு நோய் தொடர்பாக யாரும் மருத்துவமனைக்கு அனுப்பப்படவில்லை என்றும், எவ்வித நோய்த் தொற்றும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்ளி அஹ்மாட் கூறினார்.
"நாங்கள் தொடர்ந்து கண்காணிப்பதோடு பரிசோதனையும் மேற்கொள்வோம். மேலும், 78 கடுமையான சுவாச தொற்று (ஏ.ஆர்.ஐ) சம்பவங்கள், 16 பொதுவான தோல் தொற்று மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சனை, ஒன்று அல்லது இரண்டு காய்ச்சல் சம்பவங்களும் உள்ளன", என்றார் அவர்.
சிகிச்சை மற்றும் நோய் தடுப்பு சேவைகளை வழங்குவதற்காக 16 மருத்துவ விரைவு பதிலளிப்புக் குழுக்கள், ஆர்.ஆர்.தி மற்றும் 32 சுகாதார ஆர்.ஆர்.தி ஆகியவற்றை உள்ளடக்கிய மொத்தம் 48 அவசர மருத்துவக் குழுக்கள், ஈ.எம்.தி, பி.பி.எஸ்ஸுக்கு அனுப்பப்பட்டன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)