Ad Banner
Ad Banner
 பொது

17-வது சபா மாநில தேர்தல் பிரச்சாரம்; 85 புகார்களைப் பெற்றது போலீஸ்

25/11/2025 03:52 PM

கோத்தா கினபாலு, 25 நவம்பர் (பெர்னாமா) --  சபா மாநில தேர்தல் பிரச்சார காலக்கட்டம் முழுவதும் சுமார் 85 புகார்களை அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் பெற்றுள்ளதாக அம்மாநில போலீஸ் ஆணையர் டத்தோ ஜௌதே டிகுன் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துவது, துஷ்பிரயோகம், மற்றும் கட்சிக்கான சுவரொட்டிகளையும் கொடிகளையும் சேதப்படுத்துதல் ஆகியவை அந்த புகாரில் அடங்கும் என்று சபா மாநில போலீஸ் ஆணையர் டத்தோ ஜௌதே டிகுன் கூறினார்.

''ஆனால் இந்த அறிக்கையை நான் சாதாரணமான ஒன்றாக பார்க்கிறேன். நிச்சயமாக தவிர்க்க முடியாத சில விஷயங்கள் இருக்கும். ஏனென்றால் அது பல கட்சிகளை உள்ளடக்கியது. கண்டிப்பாக பல பிரச்சனைகள் குறித்து புகார்கள் வழங்கும் சில கட்சிகல் உள்ளன. இருப்பினும், இப்பிரச்சனை சபா மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தைச் சுமூகமாக நடத்துவதைப் பாதிக்கவோ அல்லது தடுக்கவோ இல்லை'', என்றார் அவர்.

இன்று சபா, கோத்தா கினபாலுவில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் அவர் செய்தியாளர்களிடம் அதனை கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)