கோத்தா கினபாலு, 25 நவம்பர் (பெர்னாமா) -- 17-வது சபா மாநிலத் தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்களிப்பு செயல்முறை, இன்று அம்மாநிலம் முழுவதும் உள்ள 58 வாக்களிப்பு மையங்களில் சுமூகமாக நடைபெற்றது.
தேர்தல் ஆணையம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையிலான நெருக்கமான ஒருங்கிணைப்பினால் முதற்கட்ட வாக்களிப்பு செயல்முறை எந்தவொரு இடையூறும் இன்றி முறையாக நடைபெற்றதாக சபா போலீஸ் ஆணையர் டத்தோ ஜவுத்தே டிக்குன் தெரிவித்தார்.
''கடவுளுக்கு நன்றி. இதுவரை எல்லாம் சீராக நடைபெற்றது. சபாவில் முதற்கட்ட வாக்களிப்பு செயல்முறை முடியும் வரை இந்த நிலைமை தொடரும் என்று நம்புகிறோம்'', என்றார் அவர்.
இன்று கோத்தா கினபாலுவில் உள்ள சபா போலீஸ் தலைமையகத்தில் தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றியப் பின்னர் டத்தோ ஜவுத்தே டிக்குன் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
நவம்பர் 29ஆம் தேதி நடைபெறும் தேர்தல் குறித்து கருத்துரைத்தர் அவர், சபா முழுவதும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியில் ஈடுபடவுள்ள நிலையில், தயார்நிலைகளும் சூழ்நிலைக்கு ஏற்ப இருப்பதாக குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)