Ad Banner
Ad Banner
 பொது

வெள்ள பாதிப்பு மாநிலங்களில் அடிப்படைத் தேவைகள் போதுமான அளவில் உள்ளன

24/11/2025 05:25 PM

ஜாலான் பினாங், நவம்பர் 24 (பெர்னாமா) -- வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாநிலங்களிலும், அடிப்படைத் தேவைகள் இதுவரை போதுமான அளவில் உள்ளன.

உணவு விநியோக கையிருப்புகளை 30 விழுக்காடு வரை அதிகரிக்க நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈராயிரத்து 102 மொத்த விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களைத் தமது தரப்பு நியமித்துள்ளதாக உள்நாட்டு வாணிப வாழ்க்கை செலவின துணை அமைச்சர் டத்தோ டாக்டர் ஃபுசியா சாலே தெரிவித்தார்.

''எனவே பாதிக்கப்பட்ட மாநிலங்களில் நாங்கள் நடவடிக்கை அறையை நிறுவியுள்ளோம். இதன் மூலம் எவ்விடத்திலாவது விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதா என்பதை நாங்கள் அறிந்து கொள்வோம். எடுத்துக்காட்டாகச் சர்க்கரை, எண்ணெய் போன்ற அடிப்படைப் பொருட்கள் கிடைப்பதற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டால் பேரிடரால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் சென்றடைவதை எங்கள் செயல்பாட்டு அறை உறுதி செய்யும்,'' டத்தோ டாக்டர் ஃபுசியா சாலே.

இன்று கோலாலம்பூரில் 2025ஆம் ஆண்டு ஆசியான் மின் வணிக மாநாட்டைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களிலும் திங்கள் முதல் கெ.பி.டி.என் நடவடிக்கை அறை திறக்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர் ஃபுசியா மேலும் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)