கோலாலம்பூர், 20 நவம்பர் (பெர்னாமா) -- சுற்றுலாத் துறையில் உள்ள வாய்ப்புகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர் மத்தமேலா சிறில் ரமபோசா இடையிலான சந்திப்பில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவிற்கும் தென் ஆப்பிரிக்காவிற்கும் இடையிலான சுற்றுலாத் துறை குறிப்பாக 2026 மலேசியாவிற்கு வருகையளிக்கும் ஆண்டுக்கு முன்னதாக இரு நாடுகளின் பொருளாதார மற்றும் இருதரப்பு உறவுகளின் முக்கிய உந்து சக்தியாகக் கருதப்படும் என்று தென் ஆப்பிரிவிற்கான மலேசிய தூதர் டத்தோ யுபஸ்லான் யூசோஃப் தெரிவித்தார்.
''சுற்றுலாத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். சுற்றுலாத் துறைதான் முதல் பிரச்சனை என்று நான் கூறினால், நான் அவரிடம் பேச வேண்டும். மலேசியாவிற்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையே நேரடி விமான சேவை இல்லை. கடந்த காலத்தில், 2012-ஆம் ஆண்டு வரை நேரடி விமான சேவை இல்லை. ஒருவேளை எதிர்காலத்தில், இணைப்பு மீண்டும் தொடங்கினால், அது சுற்றுலாத் துறைக்கு ஓர் உந்துதலாக இருக்கும்,'' என்றார் டத்தோ யுபஸ்லான் யூசோஃப்.
இன்று இயங்கலை வழி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.
இதனிடையே, கடந்த மாதம் 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் அதிபர் ரமபோசா மலேசியாவிற்கு அளித்த வருகையின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும், அதற்கான தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று டத்தோ யுபஸ்லான் குறிப்பிட்டார்.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)