Ad Banner
Ad Banner
 பொது

பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கான ஆள்சேர்ப்பு; பல நியமன நிபந்தனைகளுக்கு போலீஸ் தளர்வு

20/11/2025 06:25 PM

ஜாலான் பார்லிமன் , 20 நவம்பர் (பெர்னாமா) -- பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கான ஆள்சேர்ப்பு செயல்முறையில் உடல் மற்றும் கல்வி தகுதி உட்பட பல நியமன நிபந்தனைகளுக்கு அரச மலேசிய போலீஸ் படை பி.டி.ஆர்.எம் தளர்வு வழங்கியுள்ளது.

பி.டி.ஆர்.எம்-இல் பல்வேறு சமூகத்தினர் இருப்பதை உறுதி செய்யும் வகையில் பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு வாய்ப்பளிப்பது இந்நடவடிக்கையின் நோக்கமாகும் என்று உள்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர். ஷாம்சுல் அனுவார் நசாரா  தெரிவித்தார்

''உண்மையில், பி.டி.ஆர்.எம் பூமிபுத்ராக்களுக்கு அல்லது பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு என்று எந்த குறிப்பிட்ட ஒதுக்கீட்டையும் நிர்ணயிக்கவில்லை. மாறாக, கல்வி தகுதி, சுகாதார நிலை, உடல் தகுதி மற்றும் பாதுகாப்புத் திரையிடல் செயல்முறையில் தேர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் ஆள் சேர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது,'' டத்தோ ஶ்ரீ டாக்டர் ஷம்சூல் அனுவார் நசாரா கூறினார்.

இன்று, மக்களவையில் பி.டி.ஆர்.எம்-இல் பூமிபுத்ரா அல்லாதவர்களின் விழுக்காடு குறித்து கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர்ச் வி.கனபதிராவ் எழுப்பிய கேள்விக்கு ஷாம்சுல் அனுவார் அவ்வாறு பதிலளித்தார்.

''மேற்கு மற்றும் கிழக்கு, அமெரிக்கா, ஐரோப்பா, சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் பெரும் முதலீடு மற்றும் வர்த்தகத்தைக் கொண்ட ஒரு வர்த்தக நாடாக மலேசியா கற்றுக்கொண்டது. ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் அதற்கு அப்பால் புதிய சந்தைகளை விரிவுபடுத்தி ஊடுருவுவதே, முன்னோக்கி செல்லும் வழி என்பதையும் அது கற்றுக் கொண்டது,'' என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்.

எத்தியோப்பியா பிரதமர் டாக்டர் அபி அஹ்மட் அலி உடன் இணைந்து நடத்தப்பட்ட செய்தியாளார் சந்திப்பில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அவ்வாறு கூறினார்.

ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைமையகம், அடிஸ் அபாபாவில் உள்ளதால் எத்தியோப்பியா, வீயூகமான ஒரு இடமாகவும் விளங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

அதோடு, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா போன்ற பாரம்பரிய பங்காளிகளுடன் உறவுகளை மேலும் வலுப்படுத்த ஜி20 போன்ற இயங்குமுறைகளையும் புத்ராஜெயா பயன்படுத்தும் என்றும் நிதி அமைச்சருமான அன்வார் இப்ராஹிம் விவரித்தார்.

இதனிடையே, இரு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பயனுள்ளதாகவும், தொலைநோக்கு பார்வை கொண்டதாகவும் இருந்ததோடு, மலேசியாவும் எத்தியோப்பியாவும் முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் கூட்டு அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியதாக அபி அஹ்மட்  தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)