Ad Banner
Ad Banner
 பொது

ஜி20 மாநாட்டில் ஆசியானின் அனுபவத்தை பகிரவிருக்கிறார் பிரதமர்

20/11/2025 06:06 PM

ஜொஹானெஸ்பர்க் , 20 நவம்பர் (பெர்னாமா) -- தென் ஆப்பிரிக்காவில் வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஜி20 உச்சநிலை மாநாட்டில், உலகளாவிய நிச்சயமற்ற தன்மையின் சவால்களை எதிர்கொள்வதில் ஆசியானின் அனுபவத்தையும் கருத்தையும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எத்தியோப்பியா, அடிஸ் அபாபாவில் இருந்து புறப்பட்டு உள்ளூர் நேரப்படி இன்றிரவு மணி ஏழு அளவில் பிரதமர் ஜொஹானெஸ்பர்க் சென்றடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிதி எனப்படும் முதலீடு, வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சாஃப்ரூல் தெங்கு அப்துல் அசிஸ்  மற்றும் கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர். சலீஹா முஸ்தாபா ஆகியோரும் பிரதமருடன் செல்கின்றனர்.

நவம்பர் 20 தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த அலுவல் பயணத்தில் மலேசிய செயற்குழுவை, நிதியமைச்சருமான அன்வார் வழிநடத்துவார் என்று தென் ஆப்பிரிவிற்கான மலேசிய தூதர் டத்தோ யுபாஸ்லான் யூசோப் தெரிவித்தார்.

''வளர்ச்சியடைந்து வரும் உலகளாவிய மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்த விவாதங்களுக்கு ஆக்கப்பூர்வமாக பங்களிக்க பிரதமர் இந்த தளத்தைப் பயன்படுத்துவார். குறிப்பாக தென் நாடுகள் மற்றும் உலக நாடுகளுக்கு முக்கியம் அளிக்கும் வகையில்,'' என டத்தோ யுபஸ்லான் யூசோஃப் தெரிவித்தார்.

இந்த உச்சநிலை மாநாட்டின் போது, “Inclusive and Sustainable Economic Growth Leaving No One Behind: Building Our Economies; the Role of Trade; Financing for Development; மற்றும் the Debt Burden” எனும் தலைப்புகளில் Datuk Seri Anwar அறிக்கைகளை வெளியிடவுள்ளதாக டத்தோ யுபஸ்லான் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)