ஜாலான் பார்லிமன், 19 நவம்பர் (பெர்னாமா) -- ஜோகூர், கூகுப்-இல் உள்ள மீன்வளர்ப்பு பகுதியில் வீசிய புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சு உடனடி நடவடிக்கை எடுக்கும்.
அச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், உதவி வழங்கும் செயல்முறை விரைவுபடுத்தப்படும் என்றும் அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு தெரிவித்தார்.
"அமைச்சு ஏற்கனவே விசாரணையை நடத்தியிருக்கிறது. உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குறுகிய காலத்தில் எங்களுக்கு உதவ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம், குறிப்பாக வலைகள் போன்றவற்றை வழங்கி அமைச்சு உதவும். அதிகாரிகள் அந்த பணிகளைச் செய்கிறார்கள்,'' டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு கூறினார்.
புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு வழங்கப்படும் அவசர உதவிக்கான ஒப்புதலை விரைவுபடுத்துமாறு தன்ஜோங் பியாய் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வீ ஜெக் செங் அமைச்சிடம் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, முஹமட் சாபு அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)