கோலாலம்பூர், 15 நவம்பர் (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மலேசியப் பொருளாதாரம் 5.2 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளது.
இது இவ்வாண்டுக்காக இலக்கிடப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கான உச்ச இலக்கு 4.0 முதல் 4.8 விழுக்காட்டு வளர்ச்சியை அடையவதற்கான சரியான வழித்தடத்தில் பயணிப்பதை குறிக்கிறது.
மேலும், நிலையான பொருளாதார உந்துதலுக்கான வலுவான அடித்தளத்தை அரசாங்கம் உருவாக்கி வருகிவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
வலுவான உள்நாட்டு தேவை நிலையான வேலைவாய்ப்பு சந்தை மற்றும் அதிக மதிப்புள்ள துறைகளில் தொடர்ச்சியான முதலீடு ஆகியவற்றுடன் ஆண்டு முழுவதும் பொருளாதார உந்துதலைப் பராமரிக்க ஒரு வலுவான அடித்தளத்தை அரசாங்கம் உருவாக்கி வருவதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மலேசியப் பொருளாதாரம் அனைத்துத் துறைகளின் வலுவான செயல்திறனால் உந்தப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வெளிப்புறத் தடைகள் மற்றும் உலகளவில் நிச்சயமற்ற தன்மைகள் இருந்தபோதிலும் மீள்தன்மை கொண்ட உள்நாட்டுத் தேவை வளர்ச்சிக்கு தொடர்ந்து வழிவகுத்ததாகவும் நிதி அமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.
இதனிடையே உள்நாட்டு தேவை சாதகமான தொழிலாளர் சந்தை, அதிகரித்த ஏற்றுமதிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பணவீக்கம் ஆகியவற்றாலும் மலேசியப் பொருளாதாரம் வளர்சி கண்டுள்ளதாக அவர் விளக்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)