Ad Banner
Ad Banner
 பொது

சபா தேர்தல்: தாமதமாக வந்ததால் போட்டியிடுவதில் தோல்வி

15/11/2025 03:31 PM

சபா, 15 நவம்பர் (பெர்னாமா) -- மற்றுமொரு நிலவரத்தில், டாமாய் சபா கட்சியைச் சேர்ந்த இரு வேட்பாளர்கள், தங்களின் வேட்புமனுவை தாமதமாக சமர்பித்ததால் 17-வது சபா மாநிலத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைத் தவறிவிட்டிருக்கின்றனர்.

செம்பொர்னா சமூக மண்டபத்தில் உள்ள வேட்புமனு மையத்திற்கு காலை 10 மணிக்குப் பிறகே வந்த அப்துல் ஹதா அப்துல் ஹாலா - சுலபாயான் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார்.

அதேபோல செம்பொர்னா  நாடாளுமன்றத்துக்குட்பட்ட புகாயா தொகுதியில் போட்டியிட நினைத்த அஹ்மட் டவுட் அவாங் என்பவர், காலை 10 மணிக்கு தமது வேட்புமனு சமர்ப்பிக்கத் தவறியிருக்கின்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)