Ad Banner
Ad Banner
 உலகம்

டெல்லி புகைமூட்டம்; எதிர்ப்பு சாதன பயன்பாடு

15/11/2025 02:40 PM

டெல்லி, 15 நவம்பர் (பெர்னாமா) -- டெல்லியை சூழ்ந்திருந்த புகைமூட்டமும் காற்றின் தரமும் மோசமடைந்து வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதில் ஒன்றாக, தற்போது தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 200 புதிய புகைமூட்ட எதிர்ப்பு சாதனத்தைக் கொண்ட லாரியைப் பயன்படுத்த அந்நாட்டு பொதுப்பணித் துறை இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்நடவடிக்கையில் லாரியில் பொருத்தப்பட்ட சாதனங்கள் மூலம் முக்கிய இடங்களில் புகைமூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நீர்த்துளிகள் தெளிக்கப்படும்.

இதன்வழி இலக்கிடப்பட்ட பகுதிகளில் காற்றை சுத்தம் செய்ய முடியும்.

இருப்பினும் இச்சாதனங்களின் செயல்திறன் குறித்து சுற்றுச்சூழல் நிபுணர்களிடையே விவாதங்கள் நீடித்து வருகின்றன.

இம்முயற்சி தூசி மாசுபாட்டிலிருந்து உடனடி நிவாரணம் வழங்குவதாக ஆதரவாளர்கள் வாதிடுகையில் பல விஞ்ஞானிகளும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இந்த தொழில்நுட்பத்தை ஒரு 'கவசமாக' கருதுவதோடு இப்பிரச்சனையின் மூல காரணத்தைக் கண்டுபிடிக்க கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் பொதுப்பணித் துறை இந்நடவடிக்கையை விரிவுப்படுத்தியுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)