Ad Banner
Ad Banner
 பொது

1எம்.டி.பி சொத்துகளை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம்

11/11/2025 04:50 PM

கோலாலம்பூர், 11 நவம்பர் (பெர்னாமா) -- ஒரே மலேசிய மேம்பாட்டு நிறுவனம் 1எம்.டி.பி சொத்துகளை மீட்கும் அரசாங்கத்தின் முயற்சியில் அண்மையில் 100 கோடி ரிங்கிட்டும் அதிகமான நிதி மீண்டும் நாட்டிற்கு திரும்ப செலுத்தப்பபட்டிருப்பது நேர்மறையான முன்னேற்றத்தைக் காட்டுகிறது.

சுவிட்சர்லாந்து மற்றும் லண்டனில் நடைபெற்று வரும் வழக்குகள் உட்பட  1எம்.டி.பி  சொத்துக்கள் மற்றும் நிதியை திரும்ப செலுத்தும் செயல்முறை நிறுவப்பட்ட ஒரு சிறப்புக் குழுவின் மூலம் இன்னும் தொடர்வதாகவும் பிரதமர் கூறினார்.

''1MDB இன்னும் இறுதி கட்டத்தில் உள்ளது. அந்நிதி அண்மையில் மீண்டும் நாட்டுக்குள் செலுத்தப்பட்டது. முழு தொகையை என்னால் சரியாக கணிக்க முடியவில்லை. ஆனால், இது முன்பு இருந்ததைவிட 100 கோடி ரிங்கிட்டுக்கும் மேற்பட்டது என்று கூறலாம். இந்த செயல்முறை இன்னும் சுவிட்சர்லாந்து மற்றும் லண்டனில் தொடர்கிறது, மற்றும் இதை நிர்வகிப்பதற்கு சிறப்பு செயற்குழு உள்ளது. தேவையிருந்தால், நான் விரிவான தகவல்களை எழுத்து வடிவில் வழங்க முடியும்,''  பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்

இன்று மக்களவையில், தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ முனைவர் சுல்காஃபெரி ஹனாபியின் கூடுதல் கேள்விக்கு நிதி அமைச்சருமான அன்வார் அவ்வாறு பதிலளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)