Ad Banner
 விளையாட்டு

டென்னிஸ்: அரையிறுதி ஆட்டத்தில் சபலென்கா

07/11/2025 07:01 PM

ரியாத், நவம்பர் 07 (பெர்னாமா) -- சவூதி அரேபியா ரியாத்தில் நடைபெற்று வரும் WTA டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கு பெலாருசின் அரினா சபாலென்கா தேர்வாகினார்.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அவர் நடப்பு வெற்றியாளர் கோகோ காஃப்வுடன் மோதினார்.

முதல் செட்டில் இரு விளையாட்டாளர்களும் திறமையான ஆட்டத்தை வெளிபடுத்தியால் ஆட்டம் அரங்கில் இருந்த ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்தாக அமைந்தது.

கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, முதல் செட்டை 7-6 என்ற புள்ளிகளில் கைப்பற்றிய சபாலென்கா, இரண்டாவது செட்டில் 6-2 என எளிதாக வெற்றி பெற்றார்.

உலகின் முதல் நிலை வீராங்கனையான சபாலென்கா, தமது முதல் WTA பட்டத்தை வெல்வதற்கான இலக்கில், நாளை இறுதி ஆட்டத்தில் களமிறங்கவுள்ளார்.

இதனிடையே, கிரேக்கம் ஏதன்ஸ்சில் நடைபெறும் ஹெலனிக் வெற்றியாளர் டென்னிஸ் போட்டியில் அரையிறுதி ஆட்டத்திற்கு நோவக் ஜோகோவிசும் லோரென்சோ முசெட்டியும் முன்னேறினர்.

போர்த்துகலின் நுனோ போர்ஹெசுடன் விளையாடிய ஜோகோவிச் 7-6 6-4 என்ற நேரடி செட்களில் வெற்றி பெற்றார்.

லோரென்சோ முசெட்டி - அலெக்ஸாண்ட்ரே முல்லர் இடையே நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தை, முசெட்டி 6-2 6-4 என்ற புள்ளிகளில் கைப்பற்றினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)