Ad Banner
 பொது

பேராக் மாநில போலீஸ் அதிகாரிகளின் தீபாவளி கொண்டாட்டம்

07/11/2025 08:24 PM

பேராக் , 7 நவம்பர் (பெர்னாமா) -- பேராக் மாநிலத்தில் பணியாற்றும் இந்திய போலீஸ் அதிகாரிகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தில், நேற்று மாலை ஈப்போவில், தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நடைபெற்றது.

இந்த உபசரிப்பில், பேராக் மாநில போலீஸ் தலைவர் டாத்தோ நூர் ஹிசாம் நோர்டின் மற்றும் மாநில போலீஸ் துணைத் தலைவர் எஸ்.ஏ.சி முஹமட் அஸ்லின் சடாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இவ்வாண்டு தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு, இனபேதமின்றி, அனைத்து போலீஸ் உறுப்பினர்களையும் இணைத்து, ஒற்றுமையாக கொண்டாடி நல்லிணக்கத்தைப் பேணும் நோக்கத்தில் நடத்தப்பட்டதாக ஏற்பாட்டுக் குழுத் தலைவரான, கோலகங்சார் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர், சூப்ரிடெண்டன் சேரளாதன் துரைசாமி தெரிவித்தார்.

''மாநில போலீஸ் துறையில் அதிகமான இந்தியர்கள் சேவையாற்றி வருகிறா்கள் அவர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ளதைக் காணும் போது மகிழ்சியாக உள்ளது. இந்த நிகழ்ச்சி எங்கள் அனைவருக்கும் இடையே மென்மேலும் ஒற்றுமையை வளர்க்கும் என்று பெரிதும் நம்புகிறோம்,'' என்றார் கோலகங்சார் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சேரளாதன் துரைசாமி 

பாரம்பரிய ஆடல் பாடல் படைப்புகள் மட்டுமின்றி, அருள் பெரும் ஜோதி காப்பகத்தைச் சேர்ந்த சிறார்களுக்கும் தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)