தென் கொரியா, 7 நவம்பர் (பெர்னாமா) -- தென் கொரியாவில், இடிக்கப்படும் நடவடிக்கைக்குத் தயாரான ஒரு மின் நிலையத்தின் பெரிய கட்டமைப்பு இடிந்து விழுந்ததில் தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், அறுவர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று பிற்பகலில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் போது சம்பந்த எஃகு கட்டமைப்பின் சில பகுதிகளை இடிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
மின் நிலையத்தின் கட்டமைப்பு இடிந்து விழுந்ததுடன் அப்பகுதி முழுவதும் கட்டமைப்புகளால் சூழ்ந்திருப்பதை சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளில் காண முடிந்தது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவர் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில் மேலும் இருவர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பதாக தீயணைப்பு அதிகாரி கிம் ஜங்-ஷிக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே, இன்று அதிகாலை தொழிலாளி ஒருவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)