Ad Banner
 பொது

நாட்டின் மீதான பற்று மலேசியர்களிடம் உயர்ந்துள்ளது

06/11/2025 07:25 PM

கோலாலம்பூர், 6 நவம்பர் (பெர்னாமா) -- மலேசிய மக்களிடையே நாட்டுப்பற்று உயர்ந்துள்ளது தகவல் துறை மேற்கொண்ட ஆய்வில் கண்டறிப்பட்டுள்ளது.

தேசிய மாத கொண்டாட்டம் மற்றும் ஜலூர் கேமிழங்கை பறக்கவிடும் பிரச்சாரம் போன்ற திட்டங்கள் நாட்டின் மீதான அன்பையும் பெருமையையும் அதிகரிக்கச் செய்திருப்பதாக 91 விழுக்காட்டினர் அந்த ஆய்வில் ஒப்புக்கொண்டனர்.

பல இனங்களும் மதங்களும் கொண்ட மக்களின் ஒற்றுமையையும் தேசிய அடையாளத்தையும் வலுப்படுத்துவதில் தேசியத் திட்டங்கள் பலன் அளித்துள்ளதை இது நிரூபித்துள்ளதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறுகிறார்.

திட்டங்களின் பயனை மதிப்பிடுவதற்காக, தகவல் துறை பல இனங்களையும் பின்னணியையும் சேர்ந்த 5,044 பேரை உட்படுத்தி ஓர் ஆய்வை நடத்தியது. அதன் முடிவுகள், தேசிய மற்றும் நாட்டுப்பற்று தொடர்பான திட்டங்கள் 91% என்ற உயர்ந்த நிலை பயனைக் கொண்டுள்ளதாகவும், Likert அளவுகோலில் 4.55 என்ற சராசரி மதிப்பைப் பெற்றுள்ளன. இந்த முடிவுகள், மலேசியர்களின் நாட்டுப்பற்று உணர்வையும் தேசிய அடையாளத்தையும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஒத்துப்போகிறது,'' என்றார் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில்.

இன்று மக்களவையில் டுங்கூன் நாடாளுமன்ற உறுப்பினர் வான் ஹசான் மொஹமட் ரம்லி எழுப்பிய கேள்விக்கு டத்தோ ஃபஹ்மி பதிலளித்தார்.

அண்மையில், புத்ராஜெயாவில் நடைபெற்ற 2025 தேசிய தின கொண்டாட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

இது, வருடாந்திர நிகழ்ச்சிக்கு மக்களிடமிருந்து கிடைத்துள்ள அபாரமான வரவேற்பை காட்டுவதாகவும் ஃபஹ்மி தெரிவித்தார்.

பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)