Ad Banner
 உலகம்

பிலாஸ்பூர் மாவட்டத்தில் சரக்கு இரயிலுடன் மோதிய பயணிகள் இரயில்

05/11/2025 03:03 PM

 

இந்தியா, 5 நவம்பர் (பெர்னாமா) --  இதனிடையே, இந்தியாவின் மத்திய சத்தீஸ்கரில் உள்ள பிலாஸ்புர் மாவட்டத்தில் பயணிகள் இரயில் ஒன்று சரக்கு இரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது நால்வர் உயிரிழந்தனர்.

மேலும் பலர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்விபத்து குறித்த தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் பணியாளர்கள் உயிர் பிழைத்தவர்களைத் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர்.

பிலாஸ்புர்-கதோரா பகுதிக்கு இடையில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

இவ்விபத்தினால், இந்த வழித்தடத்தில் பல பயணிகள் மற்றும் விரைவு ரயில்களை சேவைகளை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
பெர்னாமா  

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)