Ad Banner
 பொது

ப்ளாக்செயின் தொழில்நுட்ப கொள்கை & இலக்குகளை இலக்கவியல் அமைச்சு ஆராய்கிறது

03/11/2025 06:07 PM

கோலாலம்பூர், 03 நவம்பர் (பெர்னாமா) -- நாட்டின் blockchain தொழில்நுட்ப வளர்ச்சிக்கான கொள்கைகள் மற்றும் இலக்குகளை வடிவமைக்கும் நோக்கில் முக்கிய கூறுகளை இலக்கவியல் அமைச்சு ஆராய்ந்து வருகிறது.

அரசாங்க நிர்வாகத் துறை, தொழில் துறை மற்றும் மக்களின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை ஏற்கும் முயற்சியும் அதில் அடங்கும் என்று இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

“ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தின் குறியீட்டு வடிவாக்கம் வழியாகப் பயன்படுத்தும் இம்முயற்சியும் குறிப்பாக சொத்து நிர்வகிப்பு மற்றும் சந்தை மேம்பாட்டு துறைகளில், பரிவர்த்தனை பாதுகாப்பும் இலக்கவியல் சூழலின் நிலைத்தன்மையும் உறுதி செய்யும். அரசாங்க, சொத்துக்களின் குறியீட்டு வடிவாக்கத்திற்கான ஒழுங்குமுறை அமைப்பை ஒருங்கிணைக்கும் முறையை உருவாக்கி வருகிறது. இதற்காக மலேசிய பத்திர ஆணையம் மற்றும் பேங்க் நெகாரா மலேசியா ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகின்றது,“ என்றார் அவர்.

இன்று மக்களவையில், 2021-2025 தேசிய ப்ளாக்செயின் இலக்கு திட்டம் குறித்து புக்கிட் பென்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் ஷெர்லினா அப்துல் ரஷிட் எழுப்பிய கேள்விக்குப் கோபிந்த் சிங் அவ்வாறு பதிலளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)