Ad Banner
 பொது

மலேசியாவில் உள்ள நெடுஞ்சாலையில் அமெரிக்க அதிபர் பயணித்த புகைப்படம் பகிர்வு

03/11/2025 05:53 PM

புத்ராஜெயா, 3 நவம்பர் (பெர்னாமா)-- 47-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டிற்கு வருகைத் தந்திருந்த அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் மலேசியாவில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் வாகனத்தில் அணிவகுத்து சென்ற புகைப்படக் காட்சி சமூக ஊடகங்களில் பரவாக பகிரப்பட்டது.

நாட்டின் சீரான போக்குவரத்து தூய்மை மற்றும் அழகான அடிப்படை வசதிகள் குறிக்கும் அப்படம் உலகம் முழுவதும் பரவலான பாராட்டுகளைப் பெற்றது.

உலக அளவில் கோடிக்கணக்கான மக்களின் கவனம் ஈர்த்த அப்படத்தை அதிபரின் பத்திரிகைச் செயலாளர் வெளியிட்டதாக பொதுப்பணி துறை அமைச்சர்டத்தோ ஶ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.

''உள்கட்டமைப்பு மேம்பாட்டில் நமது கடின உழைப்பு புத்தாக்கம் மற்றும் ஒழுக்கம் அனைத்துலக அளவில் கவனிக்கப்படாமல் போகவில்லை என்பதை இது நமக்கு நினைவூட்டியது. ஆனால் மிக முக்கியமாக இது இன்னும் சிறப்பாகச் செய்ய ஒரு உந்துதலாக செயல்படுகிறது. நமது சாதனையில் பெருமை கொள்வோம். ஆனால் மறுபரிசீலனை செய்யவும் சீர்திருத்தவும், வலுப்படுத்தவும் நமக்கு தைரியம் இருக்க வேண்டும். ஏனெனில் பராமரிப்பு என்பது சாலைகளைப் பற்றியது மட்டுமல்ல. இது கண்ணியம், பாதுகாப்பு மற்றும் எதிர்கால தயார்நிலை பற்றியதாகும்.'' என்றார் பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி 

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற 2025 மலேசிய சாலை பராமரிப்பு மாநாடு மற்றும் MY-ASEAN சாலை & போக்குவரத்து தொழில்நுட்ப கண்காட்சியில் கலந்து கொண்டு பேசியபோது நந்தா அவ்வாறு கூறினார்.

பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)