ஜியோங்ஜூ, 01 நவம்பர் (பெர்னாமா) -- ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு ஏபெக் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டம் ஏ-இ-எல்-எம்மிற்கு மலேசிய பேராளர் குழுவிற்குத் தலைமையேற்று தென் கொரியாவுக்கான அலுவல் பயணத்தை நிறைவு செய்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தாயகம் புறப்பட்டார்.
அன்வாரை ஏற்றிச் சென்ற விமானம், பூசான், கிம்ஹெ அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள கிம்ஹெ விமான தளத்திலிருந்து மலேசிய நேரப்படி பிற்பகல் மணி 2.08க்குப் புறப்பட்டது.
தென் கொரியாவுக்கான மலேசிய தூதர் டத்தோ முஹமட் ஸம்ருனி காலிட் மற்றும் தென் கொரிய விமானப்படையின் 5வது விமானப் பிரிவின் தளபதி பிரிதேடியர் ஜெனரல் காங் கியுன் ஷின் ஆகியோர் பிரதமரை வழியனுப்ப விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)