Ad Banner
Ad Banner
 விளையாட்டு

ஏ.டி.பி; அரையிறுதியில் சின்னர்

13/11/2025 04:45 PM

டொரினோ, 13 நவம்பர் (பெர்னாமா) --   ஏ.டி.பி Finals டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கு நடப்பு வெற்றியாளர் யென்னிக் சின்னர் தேர்வாகியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அவர் அலெக்சாண்டர் ஸ்வெரெவுடன் விளையாடினார்.

இரு முறை ஏ.டி.பி Finals டென்னிஸ் போட்டியின் பட்டத்தை வென்றுள்ள அலெக்சாண்டர் ஸ்வெரெவ் இம்முறை சற்று வலுவிழந்து காணப்பட்டார்.

அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சின்னர் 6-4 6-3 என்ற நேரடி செட்களில் வெற்றி பெற்றார்.

நாளை நடைபெறவிருக்கும் குழு அளவிலான ஆட்டத்தில் சின்னர், அமெரிக்காவின் பென் ஷெல்டனுடன் விளையாடவிருக்கிறார்.

நேற்று நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில், கனடாவின் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிமும் அமெரிக்காவின் பென் ஷெல்டனும் விளையாடினர்.

முதல் செட்டில் 4-6 என்ற புள்ளிகளில் ஷெல்டன் வெற்றி பெற்றாலும், அடுத்த இரண்டு செட்களையும் 7-6 7-5 என்ற புள்ளிகளில் ஆகர்-அலியாசிம் கைப்பற்றினார்.

குழு அளவிலான அடுத்த ஆட்டத்தில் ஆகர்-அலியாசிம், அலெக்சாண்டர் ஸ்வெரெவுடன் மோதவுள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)