ஹாங்காங், 27 அக்டோபர் (பெர்னாமா) -- கடந்த வாரம் திங்கிட்கிழமை, ஹாங்காங் விமான நிலைய ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானத்தின் சிதைவுகள் நேற்று அகற்றப்பட்டன.
ACT AIRLINES நிறுவனத்தின் BOEING 747 ரக விமானம், கடலில் விழுவதற்கு முன்பு, ரோந்து காரில் மோதியதால் இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
விமானத்தில் பயணித்த நான்கு பணியாளர்கள் காயங்களின்றி உயிர் தப்பினர்.
விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு விமானத்தின் குரல் பதிவு பெட்டி மீட்கப்பட்டிருப்பதால், இன்னும் ஒரு மாதத்திற்குள் முதற்கட்ட அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)