கோலாலும்பூர், 29 அக்டோபர் (பெர்னாமா)-- நாடாளுமன்றத்தில் விவாதங்களின் போது அரசு ஊழியர்களை அவமதிக்க வேண்டாம் என்று மக்களவைத் தலைவர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். அவ்வாறு செய்யும் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள், அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் உட்பட அமைச்சரவையை விமர்சிக்கலாம் ஆனால் , அரசு ஊழியர்களை அவையில் அவமதிக்க முடியாது என்று ஜோஹாரி குறிப்பிட்டார்.
"என் வார்த்தைகளை கவனத்தில் கொள்ளுங்கள். இந்த பக்கத்திலோ (அரசாங்கத்திலோ) அந்த பக்கத்திலோ (எதிர்க்கட்சியிலோ) அரசு ஊழியர்களை அவமதிக்கும் எவரும் இருந்தால், நான் நடவடிக்கை எடுப்பேன். நீங்கள் அரசியல்வாதிகளைப் பற்றி கருத்து தெரிவிக்கலாம், அதைச் செய்யாதீர்கள்... நான்.. சொல்கிறேன். முதலில் கேளுங்கள். பேச வேண்டாம், குத்திக்காட்ட வேண்டாம், நாங்கள் அதில் திருப்தி அடையவில்லை, அது வேறு விஷயம்." என்றார் மக்கவைத் தலைவர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல்.
இன்று, மலேசியா-அமெரிக்கா பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் ART தொடர்பில், மக்களவையில் முதலீடு, வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சர், தெங்கு டத்தோ ஶ்ரீ ஸஃப்ரூல் அப்துல் அஜீஸ்-சின் விளக்க மளிப்புக்கு பிறகு ஜொஹாரி அந்த எச்சரிக்கையை வழங்கினார்.
முன்னதாக, அந்த ஒப்பந்தம் நாட்டின் இறையாண்மையை பாதிக்கவில்லை என்று ஸஃப்ரூல் விளக்கமளித்தபோது மக்களவையில் வாதாங்களால் பெரும் பரபரப்பும் கூச்சலும் ஏற்பட்டது.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)