லத்தீன், 25 அக்டோபர் (பெர்னாமா) -- கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோவுக்கு எதிராக அமெரிக்கா தடைகள் விதித்துள்ளது.
அமெரிக்காவுக்கான கோகைன் வகைப் போதைப் பொருள் வர்த்தகத்தைத் தடுப்பதில் பெட்ரோ தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கை லத்தீன் அமெரிக்காவில் தனது நீண்டகால அந்த நட்பு நாடுடனான அரச தந்திர பதட்டங்களை அதிகரித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான கடுமையான கொள்கையை அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் தீவிரப்படுத்தியதால் இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டது.
இதில் போதைப்பொருள் கடத்தல் கப்பல்களைக் குறிவைத்து கரீபியன் கடலில் இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவதும் அடங்கும்.
இதற்கு முன்னதாகப் பெட்ரோவை “முக்கிய போதைப்பொருள் கடத்தல் தலைவன்” என்று டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.
பெட்ரோ அதிபராகப் பொறுப்பேற்றதிலிருந்து, கொலம்பியாவில் கோகைன் உற்பத்தி பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக அமெரிக்க கருவூலச் செயலாளர், ஸ்கோட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)