புத்ராஜெயா, 24 அக்டோபர் (பெர்னாமா) -- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமைத்துவத்திற்கு முழு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் 16 அரசு சார்பற்ற அமைப்புகள், NGO-வின் கூட்டணி இன்று அவரிடம் மனு ஒன்றை வழங்கியது.
அதில், அக்டோபர் 26 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறும் 47-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம் உடனான சந்திப்பின்போது மலேசியாவின் நிலைப்பாட்டை தெரிவிப்பதற்கான முயற்சிகளும் அடங்கும்.
பிரதமரின் தலைமைத்துவத்தை ஆதரிப்பது மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் உட்பட ஐந்து அம்சங்கள் அந்த முனுவில் இடம்பெற்றிருப்பதாக மலேசிய இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பின் தலைவர் அஹ்மட் ஃபஹ்மி முஹமட் சம்சுடின் தெரிவித்தார்.
''நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் பிரதமரின் முயற்சிகளுக்கு எங்கள் ஆதரவை நாங்கள் குறிப்பிட்டோம். எனினும், இந்த உறவு நாட்டின் இறையாண்மை மற்றும் கண்ணியத்திற்கான பரஸ்பர மரியாதை என்ற கொள்கையின் அடிப்படையில் இருக்க வேண்டும். மக்களின் நலன்களை தியாகம் செய்யக்கூடாது. மேலும், எந்தவொரு முதலீடு, வரி தொடர்பான நடவடிக்கைகள் போன்றவை சமூக நீதி மற்றும் உள்ளடக்கிய மனித மேம்பாட்டின் மதிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம்,'' என்றார் அவர்.
புத்ராஜெயா, பிரெசின்ட் 16-இல், அல்-குட்டூஸ் சூராவில், பிரதமர் வெள்ளிக்கிழமை தொழுகையை மேற்கொண்ட பின்னர் அஹ்மட் ஃபஹ்மிஅந்த மனுவை வழங்கினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)