புத்ராஜெயா, 24 அக்டோபர் (பெர்னாமா) -- தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் டத்தோ இவோன் பெனெடிக் பதவி விலகியதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து எந்த தகவல் அல்லது விவரங்களை தாம் பெறவில்லை என்பதை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தினார்.
கினபாலு முற்போக்கு பெர்சத்து கட்சி, உப்கோ தலைவரான அவர் இன்று தாம் தலைமையேற்ற அமைச்சரவை கூட்டத்திலும் கலந்து கொண்டதாக பிரதமர் கூறினார்.
இன்று, புத்ராஜெயா, பிரெசின்ட் 16 உள்ள அல் குட்டூஸ் சூராவில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
சபாவின் அரசியலமைப்பு உரிமையை 40 விழுக்காட்டிற்கு அங்கீகரித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, சட்டத்துறை தலைவர் அலுவலகம், ஏஜிசி மேல்முறையீடு செய்தால், அமைச்சரவையில் இருந்து பதவி விலகுவதாக இவோன் தெரிவித்ததாக அண்மையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)