தைப்பீங் பேராக், அக்டோபர் 24, (பெர்னாமா) -- மூன்று மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் வெள்ளம்.
இன்று மாலை மணி 4 நிலவரப்படி, பேராக், கெடா மற்றும் பினாங்கு மாநிலங்களில் உள்ள 1,278 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 3,926 பேர், 35 தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
அந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தேசிய பேரிடர் கட்டுப்பாட்டு மையமும் தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம், நட்மாவும் தெரிவித்துள்ளன.
பேராக் மாநிலத்தில், லாருட் மாவட்டத்தில் மாதாங், செலாமா, மன்ஜுங் மாவட்டம் மற்றும் மத்திய பேராக் மாவட்டத்தில் மொத்தம் 22 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், 794 குடும்பங்களைச் சேர்ந்த 2,281 பேர் அங்கு தங்கியிருக்கின்றனர்.
இதனிடையே, கெடா மாநிலத்தில், கூலிம் மற்றும் குவாலா மூடா மாவட்டங்களில், ஏழு வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் 283 குடும்பங்களைச் சேர்ந்த 902 பேர் தங்கியிருக்கின்றனர்.
பினாங்கில், செபெராங் பெராய் உத்தாரா மற்றும் பராட் டாயா மாவட்டங்களில் திறக்கப்பட்டிருக்கும் ஆறு வெள்ள நிவாரண மையங்களில், 201 குடும்பங்களைச் சேர்ந்த 743 பேர் தங்கியுள்ளனர்.
இதுவரை எந்தவொரு மரணச் சம்பவமும் பதிவாகவில்லை.
பொது தற்காப்புப் படையின், பேரிடர் நிர்வகிப்பு செயலகம், தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)