கோலாலம்பூர், 22 அக்டோபர் (பெர்னாமா ) -- நாட்டின் அரிய மண் தனிமங்கள் R-E-E தொழிற்துறையை மேம்படுத்த உள்ளூர் நிறுவனங்களுடன் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளும் அந்நிய நிறுவனங்களுக்கு மலேசியா வாய்ப்பளிக்கிறது.
அத்தகைய கூட்டு முயற்சிகள் நேர்மறையான பொருளாதார விளைவுகளை உருவாக்கி தேசிய நலன்களுடன் இணங்குவதாக முதலீடு, வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்தார்.
"தங்கள் தொழில்துறைகளை இங்கு மேம்படுத்த வரும் எந்த நாடுகளுக்கு எங்களிடம் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. நாங்கள் அதை ஊக்குவிக்கிறோம். ஏனென்றால், எங்களுக்கு பரவல் விளைவு நேர்மறையானதாக இருந்தால் அவர்கள் சரியான வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறார்கள். விநியோகச் சங்கிலிக்கு புதிய வாய்ப்புகளை வழங்குகிறார்கள். அதாவது அந்த நிறுவனங்களை ஆதரிக்க மலேசிய நிறுவனங்களைக் கொண்டு செல்கிறார்கள். நாங்கள் அதனை ஆதரிக்கிறோம். ஆமாம், அவர்கள் வரி செலுத்துவார்கள் என்று நம்புகிறோம்," என்று தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் கூறினார்.
குறைந்த சிக்கலான மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக நடுத்தர செயலாக்க நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதை மலேசியா நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெங்கு சஃப்ருல் கூறினார்.
'ஆசியானின் பொருளாதார செழிப்பு, வட்டார அரசியல் நிலைத்தன்மையை எவ்வாறு ஆதரிக்கிறது' என்ற கருப்பொருளில் புதன்கிழமை நடைபெற்ற ஒரு நேர்காணலின் போது அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)