Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

பிரேசில் அதிபருக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு

25/10/2025 05:04 PM

புத்ராஜெயா, 25 அக்டோபர் (பெர்னாமா) -- 47-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டிலும் அதன் தொடர்பான கூட்டங்களிலும் கலந்து கொள்ள மலேசியாவிற்கு வருகை புரிந்திருக்கும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவிற்கு புத்ராஜெயாவில் உள்ள பெர்டானா புத்ரா வளாகத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.

காலை மணி 9க்கு இங்கு வந்தடைந்த அவரைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றதோடு அவருடன் பெர்டானா புத்ரா சதுக்கத்திற்கு சென்றடைந்தார்.

பின்னர், அங்கு இரு நாடுகளின் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து மேஜர் கைருல் அஸ்மி ஜாமிங்கோன் தலைமையிலான மரியாதை அணிவகுப்பை லூலாவைப் பார்வையிட்டார்.

அதிகாரப்பூர்வ சடங்குகளுக்குப் பின்னர், அவ்விரு தலைவர்களும் இருவழி கூட்டம் நடத்த அங்கிருந்து செரி பெர்டானா வளாகத்திற்கு புறப்பட்டனர்.

மற்றொரு நிலவரத்தில் 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள சீனா துணை அதிபர் He Lifeng நேற்றிரவு மலேசியா வந்தடைந்தார்.

சுமார் இரவு மணி 11.15 அளவில் Heயும் சீனா பேராளர் குழுவும் சிப்பாங்கில் உள்ள செம்பருத்திப் பூவை வளாகத்தில் பாதுகாப்பாக தரையிறங்கினர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)