கெடா, 21 அக்டோபர் (பெர்னாமா)-- இதனிடையே இம்மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 47ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் காசாவின் மனிதாபிமான நிலைமை உட்பட வர்த்தகம் முதலீடு மற்றும் உலகளாவிய அமைதி குறித்த விவகாரங்களை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்புடன் கலந்துரையாடுவார்.
டிரம்புடனான இந்தப் பேச்சுவார்த்தையில் பரஸ்பர பொருளாதார நலன்கள் மற்றும் ஒரு வர்த்தக நாடு என்ற அடிப்படையில் மலேசியாவின் வியூக நிலைப்பாட்டில் கவனம் செலுத்தப்படுவதுடன் பரந்த நிலையிலான அனைத்துலக கவலைகளையும் நிவர்த்தி செய்யும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் தெரிவித்தார்.
பிரேசில், தென்னாப்பிரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுடன் ஆசியான் உறுப்பு நாடுகளையும் உள்ளடக்கிய வட்டாரக் கூட்டத்தில் டோனல்ட் டிரம்ப் கலந்து கொள்வார்.
"இவ்விவகாரம் தொடர்பில் நாங்கள் இருமுறை தொலைபேசியில் உரையாடினோம். அவர் (டிரம்ப்) மிகவும் அன்பானவர், மிகவும் ஆதரவானவர். சொல்வதை அவர் நன்கு கேட்டறியக்கூடியவர். இந்த வாய்ப்பை நன்முறையில் நான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்," என்றார் பிரதமர்.
அவ்வப்போது கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் அமெரிக்காவுடனான மலேசியாவின் உறவு வலுவாகவே உள்ளதோடு இரு நாடுகளும் ஆழமான பொருளாதார மற்றும் அரச தந்திர உறவுகளைப் பகிர்ந்து கொள்வதை நிதியமைச்சருமான அன்வார் சுட்டிக்காட்டினார்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)