BREAKING NEWS   Air Force One carrying US President Trump has landed at KLIA at 9.54 am | 
Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

குழந்தைகள் சம்பந்தப்பட்ட அனைத்து வழக்குகளும் ஒரு வருடத்திற்குள் தீர்க்கப்பட புதிய எஸ்.ஓ.பி

18/10/2025 04:28 PM

ஜோகூர், 18 அக்டோபர் (பெர்னாமா)-- குழந்தைகள் சம்பந்தப்பட்ட அனைத்து வழக்குகளும் ஒரு வருடத்திற்குள் தீர்க்கப்படுவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் புதிய செயல்பாட்டு தர விதிமுறை நிலையான இயக்க முறைமையை நிர்ணயிக்கவுள்ளது.

நாட்டில் குழந்தைகளுக்கான நீதி அமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த வழிகாட்டுதல்கள் அக்டோபர் 24 ஆம் தேதி நீதிமன்றத்தில் வெளியிடப்படும் என்று சட்டம் மற்றும் கழகச் சீர்த் திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலீனா ஓத்மான் சைட் தெரிவித்தார்.

பாதிக்கப்படும் குழந்தைகள் பெரியவர்களாகும்போது சாட்சிகளாக மீண்டும் வழக்கு விசாரணைகளில் கலந்து கொள்ள மறுக்க வழிவக்கும் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்களை இம்முயற்சி களையும் என்று விளக்கினார்.

''எனவே, சட்ட விவகாரப் பிரிவு மற்றும் நீதிமன்றங்களின் சார்பாக குழந்தைகள் குற்றவாளிகளாகவோ அல்லது பாதிக்கப்பட்டவர்களாகவோ இருந்தால், அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக உள்ளோம். தலைமை நீதிபதியும் மலாயா தலைமை நீதிபதியும் அதை ஒப்புக்கொண்டனர்,'' என்றார் சட்டம் மற்றும் கழகச் சீர்த்திருத்தத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலீனா ஓத்மான் சைட் 

இன்று பெங்கெராங்  நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், அசாலீனா செய்தியாளர்களிடம் பேசினார்.

பெர்னாமா  

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)