Ad Banner
Ad Banner
 பொது

மூன்று முதன்மை விளையாட்டு நிதிகளுக்கு 10 கோடி டிங்கிட் ஒதுக்கீடு

12/12/2025 06:57 PM

புத்ராஜெயா, டிசம்பர் 12 (பெர்னாமா) -- தேசிய விளையாட்டு அறக்கட்டளை நிதி குழு கே.டபிள்யூ.எஸ்.என் விளையாட்டுக்குத் தகுந்த மானியம் ஜிபிஎஸ் மற்றும் சமூக விளையாட்டு நிதி டி.எஸ்.கே உள்ளிட்ட அடுத்த ஆண்டுக்கான மூன்று முதன்மை விளையாட்டு நிதிகளுக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு 10 கோடி டிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளது. 

அந்தத் தொகையில் 5 கோடி ரிங்கிட் கே.டபிள்யூ.எஸ்.என்னுக்கும் மூன்று கோடி ரிங்கிட் ஜிபிஎஸ்கும் இரண்டு கோடி ரிங்கிட் டி.எஸ்.கேவிற்கும் வழங்கப்படவிருப்பதாக அதன் அமைச்சர் ஹன்னா யோ தெரிவித்தார்.

விண்ணப்ப அட்டவணை உள்ளிட்ட விரிவான விதிமுறைகளும் நிபந்தனைகளும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் கே.பி.எஸ் வலைத்தளத்தில் பதிவேற்றப்படும்.

இது சங்கங்களும் ஏற்பாட்டாளர்களும் நிர்ணயிக்கப்பட்ட அட்டவணைபடி முழுமையான விண்ணப்பங்களைத் திட்டமிட்டு சமர்ப்பிப்பதை எளிதாக்கும் என்று ஹன்னா கூறினார்.

''இன்னொரு விஷயம் என்னவென்றால் கே.பி.எஸ் மற்றும் எங்களின் கீழ் ஒதுக்கீடுகளை வழங்கும் எந்தவொரு நிறுவனத்திற்கும் எங்களிடம் எந்த கட்டணங்களோ முகவர் கட்டணங்களோ அல்லது சேவை கட்டணங்களோ இல்லை. எங்களிடம் பொருட்கள் அனுப்பும் சேவைக்கான பணியாளர்களும் இல்லை,'' என்றார் ஹன்னா யோ.

ஜிபிஎஸ் குறித்து விவரிக்கையில், மாநில, தேசிய மற்றும் அனைத்துலக அளவில் உயர்தர மற்றும் உயர் தாக்கத்தை ஏற்படுத்தும் போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கான திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை வடிவில் மானியங்கள் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)

 KEYWORDS
 தொடர்புடைய செய்திகள்
 பரிந்துரை