சுவிட்சர்லாந்து, 17 அக்டோபர் (பெர்னாமா) -- 2026-ஆம் ஆண்டு உலகக் கிண்ண காற்பந்தாட்ட போட்டிக்கு இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் மாத மத்தியில் தொடங்கிய பிரத்யேக விற்பனை மூலம் இந்த டிக்கெட்டுகள் விற்றக்கப்பட்டதாக உலக காற்பந்து சம்மேளனம், FIFA தெரிவித்திருக்கிறது.
212 நாடுகளில் உள்ள காற்பந்து ரசிகர்கள் இந்த டிக்கெட்டுகளை வாங்கியிருப்பதாக FIFA கூறியது.
2026-ஆம் ஆண்டு உலகக் கிண்ண காற்பந்தாட்டம், முதன்முறையாக அமெரிக்கா கனடா மற்றும் மெக்சிக்கோ ஆகிய மூன்று நாடுகளில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
அதனால், அம்மூன்று நாடுகளில் இருந்தே அதிகமான டிக்கெட்டுகள் வாங்கப்பட்டுள்ளன.
இருப்பினும் இங்கிலாந்து, ஜெர்மனி, பிரேசில், ஸ்பெயின், கொலம்பியா, அர்ஜென்டியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்தும் டிக்கெட்டுகள் வாங்கப்பட்டிருப்பதாக FIFA குறிப்பிட்டுள்ளது.
10 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றக்கப்பட்டுள்ளதால், 2026-ஆம் ஆண்டு உலகக் கிண்ண காற்பந்தாட்டத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதாக FIFA தலைவர் Gianni Infantino தெரிவித்தார்.
டிக்கெட்டுகளுக்கான பொது விற்பனையின் முதற்கட்டம் அக்டோபர் 27-ஆம் தேதி தொடங்கும் என்றும் FIFA அறிவித்துள்ளது.
--பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]