Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

18 கம்போடிய ராணுவ வீரர்களை தாய்லாந்து விடுவித்தது

31/12/2025 05:58 PM

தாய்லாந்து, 31 டிசம்பர் (பெர்னாமா) -- தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 கம்போடிய ராணுவ வீரர்களை தாய்லாந்து, உள்ளூர் நேரப்படி காலை மணி 10-க்கு, அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பியுள்ளது.

டிசம்பர் 27ஆம் தேதி, எல்லை பொது செயற்குழு, ஜி.பி.சி-இன் மூன்றாவது சிறப்புக் கூட்டத்தின் போது அவ்விரு நாடுகளும் கையெழுத்திட்ட கூட்டு அறிக்கைக்கு ஏற்ப இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

72 மணி நேரம் போர் நிறுத்தம் முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்ட ராணுவ வீரர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்று முன்னதாக கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தாய்லாந்து வெளியுறவு அமைச்சு, எம்.எஃப்.ஏ தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி கோலாலம்பூரில் கையெழுத்திடப்பட்ட தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான கூட்டுப் பிரகடனத்தின்படியும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.

18 கம்போடிய இராணுவ வீரர்களை தடுத்து வைத்திருந்த காலக்கட்டத்தில், தாய்லாந்து அமலாக்கத் தரப்பினர் 1949 ஜெனீவா மாநாடு மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், ஐ.சி.ஆர்.சி நிர்ணயித்த மனிதாபின நடைமுறை உட்பட அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்தைப் பின்பற்றியதாகவும் எம்.எஃப்.ஏ தெரிவித்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)