கோலாலம்பூர், 15 அக்டோபர் (பெர்னாமா) -- நாட்டின் காலநிலை மாற்றத்திற்கு மிகவும் பொருத்தமான பல்வகை சோள விதைகளை உற்பத்தி செய்யும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை, மலேசிய விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம், MARDI மேற்கொண்டு வருகிறது.
இறக்குமதி செய்யப்படும் கால்நடை பொருள்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும் என்று விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத துணை அமைச்சர் டத்தோ ஆர்தர் ஜோசப் குரூப் கூறினார்.
''நாம் முதலில் விதைகள் உற்பத்தி செய்ய வேண்டும் அல்லது நமது காலநிலைக்கு மிகவும் பொருத்தமான வகைகள், மற்ற உற்பத்தி செய்யும் நாடுகளுடன் ஒப்பிடும்போது அதிக மழைப் பொழிவைக் கொண்டவை. மேலும், நாட்டில் உள்ள மண்ணின் ஈர்ப்புத் தன்மைக்கும், வெப்பநிலைக்கும் மிகவும் பொருத்தமானது,'' என்றார் அவர்.
இன்று மக்களவையில், தங்கா பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பக்ரி ஜமாலுடின் எழுப்பிய கேள்விக்கு ஆர்தர் அவ்வாறு பதிலளித்தார்.
இது தொடர்பில் அரசாங்கத்திற்குத் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அரசாங்கம் கையெழுத்திட்டிருப்பதாக அவர் விவரித்தார்.
அவற்றில், கடந்தாண்டு மிக பெரிய அளவில் சோள நடவு திட்டத்தைச் செயல்படுத்திய எஃப்.ஹி.வி ஹோல்டிங்ஸ் மற்றும் கெந்திங் ப்ளான்டேஷன் நிறுவனங்களும் அடங்கும் என்று அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)