Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

கெரிபியன் நாடுகளைப் புரட்டிப் போட்ட 'மெலிசா' புயல்

26/10/2025 04:23 PM

ஜமைக்கா, அக்டோபர் 26 (பெர்னாமா) -- கெரிபியன் நாடுகளில் வெப்ப மண்டல புயல்களின் தாக்கம் ஏற்படுவது வழக்கம் என்ற நிலையில் தற்போது அங்கு உருவெடுத்திருக்கும் மெலிசா புயல் பெரும் பாதிப்பை வருகிறது.

இதனால், ஹைதி, டோமினிகன் குடியரசு, ஜமைக்கா உள்ளிட்ட நாடுகளில் தொடர் மழை, பலத்த காற்று ஆகியவற்றுடன் நிலச்சரிவுகளும், வெள்ளமும் ஏற்பட்டு உயிரிழப்புகளை அதிகரித்துள்ளது.

இதுவரை ஹைதியில் மூவர் உயிரிழந்துள்ள வேளையில், டோமினிகன் குடியரசில் ஒருவர் பலியாகி உள்ளார்.

இந்த மெலிசா புயல், வலுவடைந்து கெரிபியன் தீவுகளை நோக்கி நகரும் வேளையில் அதன் ஆபத்து அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

குறிப்பாக, ஜமைக்காவில் கடும் மழை, பலத்த காற்று மற்றும் பரவலான வெள்ள அபாயங்கள் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 31 மாகாணங்களில் ஒன்பதிற்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தீவில் உள்ள இரண்டு முக்கிய விமான நிலையங்களை மூட அதிகாரிகள்
உத்தரவிட்டதுடன், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றலாக கேட்டுக்கொண்டுள்ளனர்.

அண்மைய ஆண்டுகளில் ஜமைக்காவை தாக்கிய மிக சக்திவாய்ந்த புயல்களில் ஒன்றாக மெலிசா என கூறப்படுகிறது.

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)