Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

டென்னசி வெடிபொருள் தொழிற்சாலை வெடிப்பு; எவரும் உயிர் பிழைக்கவில்லை

12/10/2025 07:13 PM

டென்னசி, 12 அக்டோபர் (பெர்னாமா) - அமெரிக்கா, டென்னசியில் உள்ள வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் எவரும் உயிர் பிழைக்கவில்லை என்று போலீஸ் தெரிவித்திருக்கிறது.

சம்பவம் நிகழ்ந்த போது, அந்த தொழிற்சாலையில் சுமார் 16 பேர் பணிபுரிந்ததாக நம்பப்படுகிறது.

இந்த அசம்பாவிதத்தில் சிக்கிய 16 பேரின் எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

அவர்கள் அனைவரும் உயிரிழந்திரக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

வெள்ளிக்கிழமை காலை, Accurate Energetic Systems எனும் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த தொழிற்சாலையில் வெடிப்பு ஏற்பட்டதாக  போலீஸ் கூறியது.

வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)