கோலாலம்பூர் 10 அக்டோபர் (பெர்னாமா) -- 2027 ஆசியக் கிண்ண தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஹரிமாவ் மலாயா அணி 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் லாவோசை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் வழி பட்டியலில் மொத்தம் ஒன்பது புள்ளிகளோடு மலேசியா F குழுவில் முன்னிலை வகிக்கிறது.
லாவொஸ், வியட்நாம் தேசிய அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் மலேசியா கோல் ஏதும் அடிக்கவில்லை.
இரண்டாம் பாதியின் 54வது நிமிடத்தில் அதன் முதல் முதல் கோலை ஆரிஃப் அய்மான் அடித்த வேளையில் இரண்டாம் கோல் 68ஆம் நிமிடத்தில் போடப்பட்டது.
ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் மலேசியாவின் மூன்றாவது கோல் அடிக்கப்பட்டது.
உலக தரவரிசையில் 123வது இடத்தில் உள்ள மலேசியா வரும் செவ்வாய்க்கிழமை புக்கிட் ஜாலில் அரங்கில் லாவோசுடன் மீண்டும் களம் காண்கிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)