கோலாலம்பூர், 06 அக்டோபர் (பெர்னாமா) - நிலநடுக்கத்தால் பாதிப்பை எதிர்நோக்கும் பகுதிகளாக பகாங், திரெங்கானு, பேராக், நெகிரி செம்பிலான், சபா, சரவாக் ஆகிய ஆறு மாநிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன
மலேசிய கனிமங்கள் மற்றும் புவி அறிவியல் துறை ஜேஎம்ஜி மற்றும் மலேசிய நில அதிர்வு வரைபடம் ஆகிய தரப்புகளின் ஆய்வின் அடிப்படையில் அம்மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அபாயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக இயற்கை வள, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹுவாங் தியோங் சீ தெரிவித்தார்.
இது தொடர்பில், மலேசிய வானிலை ஆய்வு மையம் மெட்மலேசியா, உள்நாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து JMG தற்போது மலேசிய நில அதிர்வு அபாய வரைபடத்த்தை புதுப்பிக்கும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு வருவதாக டத்தோ ஶ்ரீ ஹுவாங் தியோங் சீ கூறினார்.
அண்மைய காலமாக நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்கள், புவியியல் மாற்றங்கள் மற்றும் மண் ஆய்வுத் தகவல்கள் உள்ளிட்ட பல தகவல்களை கருத்தில் கொண்டு இந்தப் புதுப்பிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
"பூமியின் மேலோட்டத்தை மீண்டும் நிலைநிறுத்தும் செயல்முறையே சிகாமாட் மற்றும் பத்து பஹாட் பகுதிகளில் நிகழ்ந்த நிலநடுக்கங்களாகும்," என்றார் அவர்.
இதனிடையே, பேரிடர் எச்சரிக்கை மற்றும் பதிலளிப்பு அமைப்பு மிகவும் திறம்பட செயல்படுவதை உறுதி செய்வதற்காக, நாட்டில் ஏற்படும் நிலநடுக்கங்ளைக் கண்காணிக்க மெட் மலேசியாவும் JMG-யும் இணைந்து செயல்படுவதாகவும் அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)