மத்தியப் பிரதேசம் , 06 அக்டோபர் (பெர்னாமா) -- இந்தியா, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சிந்த்வாரா எனும் மாவட்டத்தில், இருமல் மருந்தை உட்கொண்டதால் குறைந்தது 14 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அம்மருந்துகள் பரிசோதிக்கப்பட்டதில் அதில் வரம்புகளை விட DIETHYLENE GLYCOL, DEG இருப்பது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
'கோல்ட்ரிஃப்' (Coldrif) எனும் பெயர் கொண்ட அந்த இருமல் மருந்துகள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
அனுமதிக்கப்பட்ட அளவை விட டைதிலீன் கிளைகோல் அதிகமாக இருந்த இருமல் மருந்தை உட்கொண்டதால், குழந்தைகள் மாண்டதாக ஆய்வக அறிக்கை தெரிவித்தது.
இந்த வழக்கில் Sresan Pharmaceuticals என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் பிரதான குற்றவாளியாகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சர்ச்சைக்குரிய அம்மருந்துகளை சேமித்து வைத்திருந்த ஒரு கிடங்கு மூடப்பட்டன.
இம்மருந்துகள் மற்ற மாநிலங்களில் ஏற்கனவே தடைசெய்யப்பட்டிருக்கும் நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள மருந்தகங்களில் விற்கப்பட்டது குறித்தும் கேள்வி எழுப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)